Breaking News

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 19 காளைகளை அடக்கிய சிறந்த வீரருக்கு கார் பரிசு - சிறந்த காளையாக முதல் பரிசு பெற்ற சின்னம்மா சசிகலா காளை முழு விவரம்

அட்மின் மீடியா
0

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 19 காளைகளை அடக்கிய சிறந்த வீரருக்கு கார் பரிசு - சிறந்த காளையாக முதல் பரிசு பெற்ற  சின்னம்மா சசிகலா காளை முழு விவரம்



மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 19 காளைகளை அடக்கி திருப்பரங்குன்றம் கார்த்தி முதல் பரிசு பெற்றார்.

குன்னத்தூர் அரவிந்த் 15 காளைகளை அடக்கி 2-வது பரிசு பெற்றார். திருப்புவனத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் முரளிதரன் 13 காளைகளை அடக்கி 3-வது பரிசு பெற்றார். 

தை முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது

இந்த போட்டியில் மொத்தமாக 836 காளைகளும் அவிழ்க்கப்பட்டன. முதல் 10 சுற்றுகளிலும் சிறப்பாக காளைகளை பிடித்த சிறந்த மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்ட அனைவரும் இறுதி சுற்றில் கலந்துகொண்டனர். இறுதிசுற்று முழுவதும் பரவலான மழைபெய்த நிலையிலும், ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது

இந்த போட்டியில் வி.கே.சசிகலா பெயரில் அவிழ்க்கப்பட்ட காளை வீரர்களை நெருங்கவிடாமல் களமாடியது. இந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் முதல் பரிசாக டிராக்டர் வாகனமும், மேயர் இந்திராணி சார்பில் கன்றுடன் கூடிய கறவை பசு ஆகிய பரிசும் வழங்கப்பட்டது. 

இரண்டாவது பரிசாக தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் மறைந்த ஜி.ஆர். கார்த்திக் பெயரில் அவிழ்க்கப்பட்ட காளைக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது.

திறம்பட விளையாடி 19 காளைகளை அடக்கிய மதுரை திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த கார்த்திற்கு முதல் பரிசாக துணை முதலமைச்சர் சார்பில் நிசான் எலெக்ட்ரிக் கார் மற்றும் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி சார்பில் கன்றுடன் கூடிய கறவை பசுவும் பரிசாக வழங்கப்பட்டது. 

போட்டியில் மாடு குத்தியதில், காவல்துறையினர் , செய்தியாளர் உட்பட மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், காளை உரிமையாளர்கள் , உள்ளிட்ட 46 பேர் காயமடைந்த நிலையில், 12 மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் போட்டியின் போது மாடுமுட்டியதில் விளாங்குடியை சேர்ந்த நவின்குமார் உயிரிழந்தார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback