18 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதள கணக்கு தொடங்க பெற்றோர் அனுமதி தேவை மத்திய அரசு
அட்மின் மீடியா
0
18 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதள கணக்கு தொடங்க பெற்றோர் அனுமதி தேவை. என மத்திய அரசு வெளியிட்ட டிஜிட்டல் தரவு பாதுகாப்பு வரைவு விதிமுறைகளில் கூறப்பட்டு உள்ளது
இந்தியாவில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதள கணக்கை தொடங்குவதற்கு பெற்றோரின் அனுமதியை பெற வேண்டும்
இதை வலைதளங்கள் உறுதி செய்ய வேண்டும், கருத்து கேட்புக்காக மத்திய அரசு வெளியிட்டுள்ள டிஜிட்டல் தரவுப் பாதுகாப்பு வரைவு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிஜிட்டல் தரவு பாதுகாப்பு வரைவு விதிகளை மத்திய அரசு கருத்துக் கேட்புக்காக வெளியிட்டு உள்ளது.இதன்படி, சமூக வலைதளங்களில் ' இந்தியாவில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதள கணக்கை துவங்குவதற்கு பெற்றோர் அனுமதியை பெற வேண்டும். கணக்கு துவங்கப்படுவதற்கு முன்னர் இதனை வலைதளங்கள் உறுதி செய்ய வேண்டும் எனக்கூறப்பட்டு உள்ளது.
Tags: இந்திய செய்திகள் தொழில்நுட்பம்
