Breaking News

பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஆம் தேதி நடைபெற இருந்த யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு

அட்மின் மீடியா
0

 பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு




பொங்கல் பண்டிகையன்று நடைபெற இருந்த யுஜிசி நெட் தேர்வை ஒத்திவைப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

யுஜிசி - நெட்” தேர்வு அட்டவணையில் தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களைக் குறிவைத்து 2025, ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் 30 பாடங்களுக்கானத் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இது முற்றிலும் தமிழர்களின் பண்பாட்டையும் அவர்களின் உணர்வுகளையும் அவமதிக்கும் செயல் என பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் பொங்கல் திருநாளில் அறிவிக்கப்பட்ட தேர்வை ஒத்திவைக்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் ஜனவரி 15 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட பட்டயக் கணக்காளர் (Chartered Accountant) தேர்வு கூட பொங்கல் விடுமுறை நாட்களில் அறிவிக்கப்பட்டது. பிறகு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடதக்கது.


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback