WhatApp மூலமாக Document களை Scan செய்து பகிரும் வசதி அறிமுகம் WhatsApp Launches Document Scanning Feature
WhatApp மூலமாக Document களை Scan செய்து பகிரும் வசதி அறிமுகம்.
முதற்கட்டமாக iOS பயனாளர்களுக்கு சோதனை முறையில் இந்த வசதி அறிமுகம் WhatsApp Launches Document Scanning Feature
வாடிக்கையாளர்களை ஈர்க்க வாட்ஸ் அப் புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது ஆவணங்களை ஸ்கேன் செய்யும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதனால் 3ம் தரப்பு செயலிகளை ஸ்கேனிங்கிற்கு பயன்படுத்த வேண்டியதில்லை.
வாட்ஸ் அப்பில் ஸ்கேன் செய்து அப்படியே ஆவணங்களை அனுப்பலாம். முதல்கட்டமாக iOS பயனர்களுக்கு இந்த வசதி கிடைக்கிறது. விரைவில் ஆன்ட்ராய்டு போன்களுக்கும் வசதி அறிமுகமாகும் என எதிர்ப்பார்க்கபப்டுகின்றது
வாட்ஸ்அப்பின் சமீபத்திய iOS அப்டேட் (24.25.80) உடன், இந்த அம்சம் இப்போது கிடைக்கிறது. இது ஆவணப் பகிர்வு மெனுவில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது, எனவே பயனர்கள் மூன்றாம் தரப்பு ஸ்கேனிங் கருவிகளை பயன்பாட்டிற்கு வெளியே தேட வேண்டியதில்லை.வாட்ஸ்அப்பின் ஆவணப் பகிர்வு மெனுவைத் திறந்து “ஸ்கேன்” என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் புதிய ஆவணத்தை ஸ்கேன் செய்யலாம். இதைச் செய்வதன் மூலம், உங்கள் சாதனத்தில் உள்ள கேமரா ஆவணத்தின் படங்களை எடுக்கத் தொடங்கும்.
Tags: தொழில்நுட்பம்

