Breaking News

உயர் மின் அழுத்த கோபுரத்தில் பணியாற்றி கொண்டிருந்த மின் ஊழியர்கள் மின்சாரம் தாக்கி உடல் கருகி பலி அதிர்ச்சி வீடியோ Two contract workers died while repairing a fault in a high voltage tower in Trichy

அட்மின் மீடியா
0

திருச்சி மாவட்டம்,கே.கே.நகர் அருகே உள்ள ஓலையூர் உயர் மின் அழுத்த கோபுரத்தில் பணியாற்றி கொண்டிருந்த மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் 2 பேர் மின்சாரம் தாக்கியதில் உடல் கருகி உயிரிழந்த நெஞ்சை பதற வைக்கும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.




திருச்சி கே.கே.நகர் அருகே ஓலையூர் ரிங் ரோடு பகுதியில் இன்று காலை மின் வாரிய ஒப்பந்த ஊழியர் கலாமணி (42) மற்றும் மாணிக்கம் (37) ஆகியோர் உயர் மின் அழுத்த கோபுரத்தில் பணியாற்றி கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் கலைமாமணி என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகிய நிலையில் உயிரிழந்தார்.இந்த சமயத்தில் கீழிருந்து மேல் ஏறிக் கொண்டிருந்த மாணிக்கம் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். 

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கேகே நகர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின்கம்பத்தில் உயிரிழந்து தொங்கிய நிலையில் இருந்த கலைமாமணியை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்,



உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட மாணிக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து கே.கே.நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மின்சாரம் தாக்கியதில் உடல் கருகி உயிரிழந்த நெஞ்சை பதற வைக்கும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.


வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1869366355297968557

Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback