முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பலனின்றி மரணம் முழு விவரம் Manmohan Singh Died
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பலனின்றி மரணம் முழு விவரம் Manmohan Singh Died
உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) சிகிச்சை பலனின்றி காலமானார்
மன்மோகன் சிங் இந்தியாவின் 14 ஆவது, பிரதமர் ஆவார். மன்மோகன் சிங், மேற்கு பஞ்சாபிலுள்ள காஹ் என்னும் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) ஊரில் பிறந்தார்.
இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். மே 22, 2004 இல் இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார்.
2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகளாக நாட்டின் பிரதமராக இருந்தவர் மன்மோகன் சிங். இவர் தான் இந்தியாவின் முதல் சீக்கிய பிரதமர் என்ற பெருமையையும் பெற்றவர்.
1991 முதல் 1996 வரை பி. வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் மன்மோகன் சிங் நிதி அமைச்சராக பணியாற்றினார்.
மக்களவை மூலம் தேர்ந்தெடுக்கப்படாத ஒரே பிரதமர் இவர் தான். 1999 தெற்கு டெல்லியில் போட்டியிட்ட இவர் பாஜக வேட்பாளரால் தோற்கடிக்கப்பட்டார். 1995 முதல் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து இந்திய மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001 மற்றும் 2007ல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்-ன் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து அவர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று (26ம் தேதி) அனுமதிக்கப்பட்டார். 92 வயதான சிங், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.
டெல்லி எஸ்ம்ஸ் மருத்துவ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இரவு 9.50 மணிக்கு காலமானார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்
