Breaking News

கேரளாவில் டெலிவரி பாயாக இருந்து படித்து நீதிபதியான யாசீன் ஷான் முஹம்மது முழு விவரம் Delivery boy to Civil Judge

அட்மின் மீடியா
0

Delivery boy to Civil Judge: Kerala's poor Muslim boy Yaseen Shan Muhammed worked through hardships of the given life came up with trumps in the Kerala Judicial Services Examinations 2024 qualifying to be a civil judge


கேரளாவில் டெலிவரி பாயாக இருந்து படித்து நீதிபதியான யாசீன் ஷான் முஹம்மது முழு விவரம் Delivery boy to Civil Judge

உணவு டெலிவரி பணி செய்தவர் கேரள நீதித்துறை தேர்வில் மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்து சாதனை குழந்தை பருவத்தில் தந்தை கைவிட்ட நிலையில் தாயாரின் அரவணைப்பில் சட்டப் படிப்பு முடித்து சாதித்துள்ளார் 2024 ஆம் ஆண்டு கேரள நீதித்துறை சேவைகள் தேர்வுகளில் இரண்டாவதாக வந்து சிவில் நீதிபதியாக தகுதி பெற்ற வழக்கறிஞர் யாசீன் ஷான் முகமது 

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் யாசீன். 6 ஆம் வகுப்பில் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தினார் அவரது சிறுவயதில் தந்தையை இழந்தவர் சிறு வயதிலேயே யாசீன் செய்தித்தாள் மற்றும் பால் விநியோகம் செய்யும் சிறுவனாக வேலை செய்யத் தொடங்கினார் மற்றும் அவரது குடும்பத்தை கவணித்து கொண்டார் அவர் ஒரு கூலி  தொழிலாளியாக கட்டுமான வேலை கூட செய்துள்ளார் 

ஆனால் விடாமுயற்சியுடன் தனது படிப்பைத் தொடர்ந்தார்.  12ஆம் வகுப்புக்குப் பிறகு எலக்ட்ரானிக்ஸ் துறையில் டிப்ளமோ படிப்பை முடித்தார். 

அதன்பின்பு எர்ணாகுளத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில்  சட்டபடிப்பு படித்தார். மாலை நேரத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்தார். மேலும் குடும்ப கஷ்டத்திற்க்காக சட்டப் பட்டப்படிப்பைத் தொடரும் போது, ​​அவர் Zomato நிறுவனத்தில் டெலிவரி பாய் ஆகப் பணிபுரிந்தார். 

மார்ச் 2023 இல் வழக்கறிஞராகப் பதிவுசெய்த பிறகு முன்சிஃப் - மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஷாகுல் ஹமீதுக்கு இளைய வழக்கறிஞராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 

இந்நிலையில் கேரள ஜூடிசியல் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று நீதிபதியாகி உள்ளார்

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback