இனி CALL செய்யவும் , SMS பன்னவும் தனித்தனி ரீசார்ஜ் டிராய் அதிரடி உத்தரவு.
இனி CALL செய்யவும் , SMS பன்னவும் தனித்தனி ரீசார்ஜ் டிராய் அதிரடி உத்தரவு.
அடுத்த 30 நாட்களுக்குள் கால் மற்றும் SMS சேவைக்கு தனித்தனியே ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்ய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு TRAI உத்தரவு
தற்போது நாம் வைத்துள்ள செல்போனுக்கு ஃபோன் கால், எஸ்எம்எஸ் மற்றும் இணையதள சேவை போன்றவைகளுக்கு சேர்த்து மொத்தமாக ரீசார்ஜ் செய்கிறோம்
இதனால் ரீசார்ஜ் செய்யும்போது அன்லிமிடெட் கால் வசதியுடன் 100 எஸ்.எம்.எஸ். செய்து கொள்ளும் வசதி நமக்கு கிடைக்கிறது. அதேசமயம் இந்த திட்டத்தால் ரீசார்ஜ் செய்யும் கட்டணம் அதிகமாகிறது.
இனி ஃபோன் பேசுவதற்கும், எஸ்எம்எஸ் செய்வதற்கும் தனித்தனியே ரீசார்ஜ் கட்டணங்கள் அமல்படுத்த இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அனைத்து டெலிகாம் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது
இனி கால் மற்றும் எஸ்எம்எஸ் தேவைகளுக்கு தனி தனியாக ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்றும் இதனை அடுத்த 30 நாட்களுக்குள் அமலுக்கு கொண்டு வர வேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள் தொழில்நுட்பம்
