Breaking News

கன்னியாகுமரி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

கன்னியாகுமரி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

 


கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25வது ஆண்டு வெள்ளிவிழாவையொட்டி, இந்தியாவிலேயே முதன் முறையாக திருவள்ளுவர் சிலை- விவேகானந்தர் பாறை இடையே கடல் நடுவே ரூ.37 கோடியில் கட்டப்பட்ட கண்ணாடி இழை பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

அப்போது முதலமைச்சர் பேசுகையில்:

திருவள்ளுவர் சிலைக்கு செல்ல 3 புதிய பயணிகள் படகுகள் வாங்கப்படும் என்றும் முதல் படகுக்கு காமராஜர் பெயரும், 2-வது படகுக்கு மார்சல் நேசமணி பெயரும், 3-வது படகுக்கு ஜி.யு.போப் பெயரும் வைக்கப்படும். என தெரிவித்த அவர் கன்னியாகுமரி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.என அறிவித்தார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback