ஈபிள் டவரில் திடீர் தீ விபத்து: சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி வைரல் வீடியோ
ஈபிள் டவரில் திடீர் தீ விபத்து: சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி வைரல் வீடியோ
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரசித்தி பெற்ற ஈபிள் டவர் உள்ளது. கஸ்டவ் ஈபிள் என்பவர் கட்டமைத்ததால் அவரது பெயரிலேயே இந்தக் கோபுரம் அழைக்கப்பட்டு வருகிறது.
கிறிஸ்துமஸ் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ஈபிள் டவர் பகுதியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் நேற்று முதலே குவிந்துள்ளனர்.
இந்நிலையில், ஈபிள் டவரில் உள்ள லிப்டில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. முதல் தளத்திற்கும், இரண்டாவது தளத்திற்கும் இடையே லிப்ட்டில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர்.
தீவிபத்து காரணமாக ஈபிள் டவர் பகுதியில் குவிந்திருந்த 1200 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் உடனடியாக அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
மேலும், அப்பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.ஈபிள் டவரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அங்கு குவிந்த சுற்றுலாப் பயணிகள் கவலை அடைந்துள்ளனர்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1871760332986974527
Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ
