ஜல்லிக்கட்டு போட்டி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
ஜல்லிக்கட்டு போட்டி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
ஜல்லிக்கட்டு போட்டியின்போது மாடுகளை அடிப்பதோ, துன்புறுத்துவதோ கூடாது
மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெறாத அமைப்பாளர்களுக்கு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கூடாது!
ஜல்லிக்கட்டு போட்டிகளை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும்!
ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் இடத்தில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும்!
போட்டி நடப்பதற்கு முன்பு கால்நடை மருத்துவரின் உரிய சான்றுகளை பெற வேண்டும் வருவாய், கால்நடை, சுகாதாரத்துறை, பொதுபணித்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்காக புதிதாக உருவாக்கப்பட்ட www.jallikattu.tn.gov.in தளத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் பெறப்பட வேண்டும். என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசின் முதன்மைச் செயலாளர் சத்ய பிரதா சாகு கடிதம்
Tags: தமிழக செய்திகள்
