தாடி வைத்த இஸ்லாமிய போலீஸ் டிஸ்மிஸ் உத்தரவு ரத்து - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மதுரையைச் சேர்ந்த முதல்நிலை காவலரான அப்துல் காதர் இப்ராஹிம், மெக்கா மற்றும் மதீனாவுக்குச் செல்லும் நோக்கத்திற்காக 09.11.2018 முதல் 09.12.2018 வரை (31 நாட்கள்) ஈட்டிய விடுப்புக்கு முறையாக விண்ணப்பித்தார்,
மேலும் 07.11.2018 தேதியிட்ட காவல்துறை இயக்குநர் ஜெனரலின் நடவடிக்கைகளின்படி அது முறையாக அனுமதிக்கப்பட்டது.
யாத்திரையை முடித்துக்கொண்டு, இடது காலில் தொற்று காரணமாக விடுமுறையை நீட்டிக்கும் நோக்கத்திற்காக 10.12.2018 உதவி ஆணையரை அணுகியபோது, அவரின் தோற்றம் மற்றும் தாடி குறித்து கேள்வி எழுப்பப்பட்டு, விடுப்பு எடுக்க அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில் பணியின் போது தாடி வைத்திருந்ததால் தான் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பணி மற்றும் ஊதிய உயர்வை நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் ஈடுகட்டு விடுப்பு குறித்து தமிழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டும் செல்லும் விதம் விடியோ வெளியிட்டார்.
இதனை காரணமாக காட்டி தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் இவரை காவல் பணியில் இருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்தார்.அதனை எதிர்த்து மனுதாக்கல் செய்தார் அப்துல் காதர் இப்ராஹிம்
இந்த வழக்கை விசாரனை செய்த மதுரை கிளை உயர்நீதிமன்றம் காவல் சட்ட விதிகளில் இதற்கு அனுமதி இருப்பதாகக் கூறிய நீதிபதி விக்டோரியா கெளரி, ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழக உள்துறை செயலாளர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை தலைவர் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், விடுப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட காவலர்களை டிஜிபி நேரில் அழைத்து ஆறுதல் தெரிவத்துள்ளார் இதுகுறித்து பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
ஆனால் காவலர் அப்துல் காதர் இப்ராஹிம், மீதான விவகாரத்தில் மட்டும் உட்சபட்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அதை தனி நீதிபதியும் சுட்டிக்காட்டி, உத்தரவை ரத்து செய்து, குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
மனுதாரர் அதனை ஏற்றுக் கொண்டிருக்கிறார். இதில் இந்த அமர்வு நீதிமன்றமும் உடன்படுகிறது. ஆகவே இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என உத்தரவிட்டனர்.
Tags: தமிழக செய்திகள்
