Breaking News

ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான அதானி நிறுவன டெண்டர் ரத்து - தமிழ்நாடு மின்வாரியம்

அட்மின் மீடியா
0
ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் ரத்து - தமிழ்நாடு மின்வாரியம்.

தமிழ்நாட்டில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்காக, மீட்டார்களைக் கொள்முதல் செய்வதற்காகக் கொடுக்கப்பட்ட சர்வதேச டெண்டரை ரத்து செய்தது மின்வாரியம்.

மிகவும் குறைவான தொகையைக் குறிப்பிட்டு இருந்த அதானி நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள சுமார் மின் நுகர்வோர்களின் மின்சார பயன்பாட்டை மேம்படுத்தும் நடவடிக்கையாக ஸ்மார்ட் மின் மீட்டர்கள் பொருத்துவதற்கு திட்டமிடப்பட்டது. இதற்காக மத்திய அரசு உடன் இணைந்து 19,000 கோடி ரூபாய் மதிப்பில் ஸ்மார்ட் மின் மீட்டர்கள் திட்டத்தை செயல்படுத்த  8 மாவட்டங்களுக்கு மட்டும் 82 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் டெண்டர் விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback