Breaking News

மகாராஷ்டிராவில் முதலாளியுடன் உறவு வைக்க மிரட்டிய கணவர்.. மறுத்த மனைவிக்கு முத்தலாக் கொடுத்த கணவர் முழு விவரம்

அட்மின் மீடியா
0

மகாராஷ்டிராவில் முதலாளியுடன் உறவு வைக்க மிரட்டிய கணவர்.. மறுத்த மனைவிக்கு முத்தலாக் கொடுத்த கணவர் முழு விவரம்

மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் பகுதியைச் சேர்ந்த 43 வயது பொறியாளர் ஒருவர், தனது முதலாளியுடன் உடல் உறவில் ஈடுபட மறுத்த தனது இரண்டாவது மனைவிக்கு முத்தலாக் கூறியதாக போலீஸாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது . டிசம்பர் 19, 2024 அன்று, 28 வயதான பெண் தனது கணவருக்கு எதிராக உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் நகரைச் சேர்ந்த ஒருவர் சாஃப்ட்வேர் இன்ஜினியராக உள்ளார். இவர் இந்த ஆண்டு ஜனவரி மாதம் குற்றம் சாட்டப்பட்ட சோஹைல் ஷேக்குடன் அந்தப் பெண்ணுக்கு திருமணம் நடந்ததாகவும் திருமணத்திற்க்கு பிறகு ​​ஷேக் பணத்திற்காக அவளைத் துன்புறுத்தத் தொடங்கியதாகவும் முதல் மனைவியை விவாகரத்து செய்ய உதவியாக 15 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டதாக அந்த பெண் கூறியுள்ளார். 

மேலும் ஷேக் தனது மனைவியை ஒரு விருந்துக்கு அழைத்துச் சென்றதாகவும் அங்கு அவர் தனது முதலாளியுடன் படுக்க செல் என்று வலியுறுத்தியதாகவும் அதற்க்கு அந்த பெண் மறுத்துவிட்டதால்  கோபமடைந்த ஷேக் வீடு திரும்பியதும் அவரது உறவினர்கள் முன்னிலையில், மூன்று முறை 'தலாக்' கூறி, உடனடியாக விவாகரத்து செய்ததாக அந்த பெண் சம்பாஜி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

மேலும் அந்த புகார் மனு விசாரணைக்காக கல்யாணில் உள்ள பசார்பேத் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது .பெண்ணின் புகாரைத் தொடர்ந்து, சோஹைல் ஷேக் மீது பாரதீய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 115(2), 351(2), 351(3), மற்றும் 352 ஆகிய பிரிவுகளின் கீழ் முஸ்லிம் பெண்களின் தொடர்புடைய விதிகள் (உரிமைகளைப் பாதுகாத்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

News Source:-


Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback