Breaking News

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன் - தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு

அட்மின் மீடியா
0

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன் - தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு


திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன்நாளையில் இருந்து 48 நாட்கள் விரதம் இருக்கப் போகிறேன். 

பிப்ரவரி மாதம் ஆறுபடை வீடுகளுக்குச் சென்று முருகனிடம் முறையிடப் போகிறேன்

நாளை காலை என் வீட்டுக்கு வெளியே நின்று எனக்கு நானே சாட்டையடி கொடுக்கப் போகிறேன்”- தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் 10 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தண்டனை கொடுக்க வேண்டும். 

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளேன். 

நாளை காலை 10 மணிக்கு என்னை நானே சாட்டையால் அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளேன்.நாளை முதல் வழக்கமான ஆர்ப்பாட்டம் நடைபெறாது. இனி வேறு மாதிரி டீல் செய்ய போகிறேன்.

ஒரே இடத்தில் கூடாமல் பாஜகவினர் ஒவ்வொருவரும் தங்களது வீட்டின் முன் நின்று போராட்டம் நடத்துவோம். 10 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை நடத்த முடியுமா? திமுக உண்மையான அரசாக இருந்தால் 15 நாட்களில் தண்டனை வழங்க வேண்டும். 

திமுகவில் இருக்கக்கூடியவர்களுக்கு கட்சிப்போர்வை தேவைப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் அனைத்து தகவலையும் எப்படி வெளியிட்டீர்கள்? அண்ணாமலை வீதிக்கு இறங்கினால் தாங்காது. 48 நாட்கள் விரதம் இருந்து, ஆறுபடை முருகனிடம் முறையிட போகின்றேன்.” என்றார்.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback