அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காதலன் கண் முன்னே காதலிக்கு பாலியல் சீண்டல்.. போலீசார் விசாரணை முழு விபரம்..
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காதலன் கண் முன்னே காதலிக்கு பாலியல் சீண்டல்.. போலீசார் விசாரணை முழு விபரம்..
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காதலன் கண்முன்னே காதலிக்கு வன்கொடுமை நிகழ்ந்ததாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது!அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிசிடிவி பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு சிசிடிவி காட்சி உதவியோடு ஒருவரை பிடித்து விசாரிப்பதாக அமைச்சர் கோவி.செழியன் தகவல் அளித்துள்ளார்
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அந்த கல்லூரியில், இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவரும் அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவரும் நேற்று இரவு இருவரும் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர் மாணவனை கடுமையாகத் தாக்கிவிட்டு அந்த மாணவியை பாலியால் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து மாணவி கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் உதவி ஆணையர் பாரதிராஜன் தலைமையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி வளாகத்தில் இருக்கும் மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்தாரா? வெளி நபர்களோ? என விசாரணை நடக்கிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:
சைல்டுலைன் இந்தியா - 1098;
பெண்கள் உதவி எண் - 181;
தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112;
வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170;
போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291;
காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094.
ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க:
https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3
Tags: தமிழக செய்திகள்
