Breaking News

இந்தியாவில் பணக்கார முதலமைச்சர் அனைத்து மாநில பட்டியல் ஆந்திர முதல்வர் முதலிடம்!தமிழக முதல்வர் எந்த இடம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

இந்தியாவில் பணக்கார முதலமைச்சர் அனைத்து மாநில பட்டியல் ஆந்திர முதல்வர் முதலிடம்!தமிழக முதல்வர் எந்த இடம் முழு விவரம்

இந்தியாவில் உள்ள மாநில முதல்வர்களின் சொத்து மதிப்புகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு (ADR) இந்த சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளது.



தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த பட்டியலில் 14-வது இடம் பிடித்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ.8 கோடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ.8,88,75,339 சொத்து வைத்துள்ள அதேவேளையில், எந்தக் கடனும் இல்லை என்று சொல்லப்பட்டுள்ளது. எனினும், முதல்வர் ஸ்டாலினுக்கு தனிப்பட்ட வருமானமாக ரூ.28 லட்சம் கிடைக்கிறது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

மொத்தம் 31 மாநில முதல்வர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு (ADR) இந்த தகவல்களை மாநில முதல்வர்கள் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த வேட்புமனுக்களில் கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் திரட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு மொத்தம் ரூ.930 கோடிக்கு மேல் சொத்து உள்ளது முதலிடத்தில் உள்ளார்.

அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு மொத்த சொத்து மதிப்பு ரூ.332 கோடியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். 

கர்நாடகா முதல்வர் சித்தராமையா ரூ.51 கோடிக்கு மேல் சொத்துகளுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். 

புதுச்சேரியின் முதல்வர் ரங்கசாமி ரூ.38 கோடி சொத்துக்களுடன் 6-ம் இடம் பிடித்துள்ளார். 

பினராயி விஜயனின் சொத்து மதிப்பு ரூ.1 கோடி என்றும் 29 வது இடத்தில் உள்ளார்

ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா சொத்து மதிப்பு ரூ.55 லட்சம் என்றும் 30 வது இடத்தில் உள்ளார்

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா15 லட்சம் சொத்துமதிப்புடன் கடைசி இடத்தில் உள்ளார்.

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு இந்த தகவல்களை மாநில முதல்வர்கள் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த வேட்புமனுக்களில் கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் திரட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

பணக்கார முதலமைச்சர் பட்டியல்:

1.Andhra Pradesh  Chandrababu Naidu Nara 

 2 Arunachal Pradesh  Pema Khandu 

3 Karnataka Siddaramaiah 

4 Nagaland  Neiphiu Rio 

5 Madhya Pradesh Dr. Mohan Yadav 

6 Puducherry  N. Rangasamy 

7 Telangana Anumula Revanth Reddy 

8 Jharkhand Hemant Soren

9.Assam  Himanta Biswa Sarma 

10 Meghalaya Conrad Kongkal Sangma 

11 Tripura Manik Saha 

12 Maharashtra Devendra Gangadhar Fadnavis 

13 Goa Dr. Pramod Sawant 

14 Tamil Nadu  M.K. Stalin 

15 Gujarat Bhupendrabh ai Rajnikant Patel 

16 Himachal Pradesh  Sukhvinder Singh 

17 Sikkim  P S Tamang

18. Haryana  Nayab Singh 

19 Uttarakhand Pushkar Singh Dhami

20 Mizoram Lalduhoma Zoram 

21 Chhattisgarh  Vishnu Deo Sai 

22 Odisha  Mohan Charan Majhi 

23 Punjab Bhagwant Mann 

24 Bihar  Nitish Kumar

25.Uttar Pradesh  Adityanath 

26 Manipur  Nongthomba m Biren Singh 

27 Rajasthan Bhajan Lal Sharma 

28 Delhi Atishi Marlena 

29 Kerala Pinarayi Vijayan 

30 Jammu and Kashmir  Omar Abdullah 

31 West Bengal  Mamata Banerjee

முழு விவரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://adrindia.org/content/Current-Chief-Ministers-from-28-State-Assemblies-and-3-Union-Territories-of-India-2024-0

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback