Breaking News

கஜகஸ்தானில் 72 பேருடன் தரையிறங்கும் போது வெடித்து சிதறிய விமானம் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

கஜகஸ்தான், அக்டாவ் நகரம் அருகே குறைந்தது 67 பயணிகளுடன் சென்ற அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகு உள்ளது இந்த விமானத்தில் 67 பயணிகள் மற்றும் விமானி உள்ளிட்ட 5 பேர் என 72 பேர் நிலை என்ன என்று தெரியவில்லை


அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் ரஷ்யாவின் செச்சினியாவில் உள்ள பாகுவிலிருந்து க்ரோஸ்னிக்கு சென்று கொண்டிருந்தது.ஆனால் க்ரோஸ்னியில் பனிமூட்டம் காரணமாக திருப்பி விடப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜகஸ்தானில் அக்டாவ் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது. விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்பு பலமுறை வானில் வட்டம் அடித்தது. விமானி நீண்ட நேரம் முயற்சி செய்தும் விபத்தை தவிர்க்க முடியவில்லை.

பயணிகள், விமானிகள் ,ஊழியர்கள் என மொத்தம் 72 பேருடன் சென்ற விமானம் கீழே விழுந்து தீப்பற்றி எரியும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தொழில்நுட்ப கோளாறு காரணமாக, விமானம் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.விமானம் தரையிறங்கும்போதே வெடித்து சிதறிய காரணத்தால், பயணிகள் உயிரிழந்து இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.விபத்து நடந்த இடத்தில் தீயை அணைக்கும் பணியில் அவசர சேவைகள் ஈடுபட்டு வருவதாக கஜகஸ்தானின் அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.



வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்;-

https://x.com/adminmedia1/status/1871825463628488756

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback