சென்னையில் மலர் கண்காட்சி ஜனவரி 2 முதல் முழு விவரம்
சென்னையில் உள்ள செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி ஜனவரி 2ஆம் தேதிமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிடுகிறார்.
சென்னை அண்ணா மேம்பாலம் அருகே 8 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட செம்மொழி பூங்கா, 2010ஆம் ஆண்டு முதல்வர் கருணாநிதி திறந்து வைத்த இந்த பூங்காவில் 800 வகையான செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு மலர் கண்காட்சியில் வித, விதமான மலர்கள் அலங்கரிக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாட்டை தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை செய்து வருகிறது.
பெண்கள், குழந்தைகளை கவரும் வகையில் பறவைகள், செல்ல பிராணிகள் வடிவங்களில் அலங்கார வளைவுகள், செடிகளின் தோற்றங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
மலர் கண்காட்சி நாள்:-
ஜனவரி 2-ந்தேதி மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கின்றர்
ஜனவரி 18-ந்தேதி வரை மலர் கண்காட்சி நடக்கிறது.
நேரம்:-
காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் மலர் கண்காட்சியை பார்வையிடலாம்.
கட்டணம்:-
மலர் கண்காட்சியை காண வரும் பெரியவர்களுக்கு கட்டணமாக ரூ.150 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிறியவர்களுக்கு ரூ.75 கட்டணமும், வீடியோ, போட்டோ கேமரா கொண்டு செல்பவர்களுக்கு ரூ.500 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மாலை நேரத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது.
Tags: தமிழக செய்திகள்
