ராமேஸ்வரம் தனியார் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா 2 பேர் கைது நடந்தது என்ன முழு விவரம்
ராமேசுவரம் அக்னிதீர்த்தக் கடற்கரையில் தனியார் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா இருந்த விவகாரத்தில் உரிமையாளரை போலீஸார் திங்கட்கிழமை கைது செய்தனர்.
ராமேஸ்வரம் கோவில் அக்னி தீர்த்த கடலில் நேற்று புதுக்கோட்டை திருமயம் பகுதியைச் சேர்ந்த முத்து, 55, உறவினர்களுடன் புனித நீராடினார்.அவரது 27 வயது மகள் உறவினர்கள் அக்னி தீர்த்த கடற்கரை அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான டீக்கடையுடன் கூடிய உடை மாற்றும் அறையில் துணி மாற்றுவதற்காக கட்டணம் கொடுத்து உடை மாற்றும் அறைக்கு சென்று உடைகளை மாற்றினார்.
அப்போது அந்த அறையின் கருப்பு நிற டைல்ஸ் கற்களுக்கு நடுவே கருப்பு நிறத்தில் ரகசியமாக கேமரா பொருத்தப்பட்டு இருந்ததை கவனித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்து அந்த பெண் கத்தி கூச்சலிட்டார். பின்பு தந்தையிடம் கூறினார். இதுகுறித்து போலீசாரிடம் முத்து புகார் அளித்தார்.
ராமேஸ்வரம் கோவில் போலீசார் வழக்கு பதிந்து, அங்கு வேலை செய்த ஊழியர்களான ராமேஸ்வரம் தம்பியான்கொல்லையை சேர்ந்த ராஜேஷ் கண்ணன், 34, ரயில்வே பீடர் ரோட்டை சேர்ந்த மீரான் மைதீன், 38, ஆகியோரை கைது செய்தனர்.
இங்குள்ள உடை மாற்றும் அறையில் பல மாதங்களாக ரகசிய கேமரா வைத்து, பெண்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்து, இவர்கள் இருவரும் மொபைல் போனில் பார்த்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.ரகசிய கேமரா, செல்போன்கள், மெமரி கார்டு போன்றவற்றை பறிமுதல் செய்த போலீசார் அதனை சைபர் கிரைம் பிரிவிற்கு ஆய்வுக்காக அனுப்பி உள்ளனர்
இதையடுத்து, இருவரையும் போலீசார் தீவிரமாக விசாரிக்க துவங்கியுள்ளனர்.இந்த சம்பவம் ராமேசுவரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், கோவிலுக்கு வரும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags: தமிழக செய்திகள்
