Breaking News

ஜனவரி 1 முதல் இந்த மாடல் போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது முழு விவரம் இதோ!

அட்மின் மீடியா
0

 ஜனவரி 1 முதல் இந்த மாடல் போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது முழு விவரம் இதோ!

வாட்ஸ்அப் செயலி பழைய சாதனங்களில் இயங்கும் வசதி குறைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது

அதன்படி ஆண்ட்ராய்டு கிட்கேட் அல்லது அதற்கும் பழைய ஓ.எஸ். கொண்ட ஸ்மார்ட்போன்களில் வருகிற ஜனவரி 1ம் தேதி முதல் வாட்ஸ்அப் செயலி இயங்காது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

2013ம் ஆண்டு வெளியான ஆண்ட்ராய்டு கிட்கேட் ஓஎஸ் மிகவும் பழையது என்பதால், வாட்ஸ்அப்-இன் புதிய அம்சங்களை அதில் வழங்குவதில் நிறைய சிக்கல்கள் ஏற்படும். வாட்ஸ்அப் சேவை நிறுத்தம் காரணமாக சாம்சங், எல்.ஜி. மற்றும் சோனி என பல ஸ்மார்ட்போன் பிரான்டுகளின் பழைய மாடல்களை பயன்படுத்துவோர் பாதிக்கப்படுவர். 

குறிப்பாக, ஆண்ட்ராய்டு கிட்கேட் (Android KitKat) அல்லது அதற்கு முந்தைய பதிப்புகளில் இயங்கும் ஆண்ட்ராய்டு போன்களிலும், iOS 15.1க்கு முந்தைய பதிப்புகளில் இயங்கும் ஐபோன்களிலும் வாட்ஸ்அப் வேலை செய்யாது

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback