பொங்கல் பண்டிகை விடுமுறை எத்தனை நாட்கள் - ஜனவரி 17-இல் அரசு விடுமுறை அளிக்கக் கோரிக்கை முழு விவரம்
பொங்கல் பண்டிகை விடுமுறை எத்தனை நாட்கள் - ஜனவரி 17-இல் அரசு விடுமுறை அளிக்கக் கோரிக்கை முழு விவரம்
பொங்கல் பண்டிகையையொட்டி, ஜன. 17-ஆம் தேதி விடுமுறை அறிவிக்க வேண்டுமென அரசு ஊழியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து, முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம் அனுப்பியுள்ள கடிதம்:
பொங்கல் பண்டிகைக்காக, ஜன. 14-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை மூன்று நாள்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கடுத்த நாளான 17-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் வேலை நாளாக உள்ளது. அதைத் தொடா்ந்து, வரும் 18 மற்றும் 19-ஆம் தேதி ஆகிய இரண்டு நாள்களும் சனி, ஞாயிற்றுக்கிழமையாகும்
ஜன. 17-ஆம் தேதி ஒரு நாள் மட்டும் அரசு விடுமுறை அறிவித்தால், தொடா்ந்து விடுமுறைகள் கிடைக்கும். இதனால், பொங்கல் பண்டிகைக்காக வெளியூா் செல்லும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் கூடுதலான நாள்கள் தங்களது ஊா்களில் தங்கும் நிலை நல்ல சூழல் ஏற்படும். எனவே, ஜன. 17-ஆம் தேதியை விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று அரசு அலுவலா் ஒன்றியம் அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025ம் ஆண்டில்
பொங்கல் பண்டிகை ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை)
திருவள்ளுவர் நாள் 15-ம் தேதி (புதன் கிழமை)
உழவர் நாள் ஜனவரி 16-ம் தேதி (வியாழக்கிழமை)
தமிழக அரசு மேற்கண்ட 3 நாட்கள் அரசு விடுமுறையை அறிவித்துள்ளது.
அதேநேரம் அந்த வாரத்தில் அடுத்த நாள் வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் வேலை நாளாகவும் அதனைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு அரசு விடுமுறை என்பதாலும், சொந்த ஊர் செல்பவர்கள் வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) விடுமுறை வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்
Tags: தமிழக செய்திகள்
