சாத்தனுாரில் 150 முதலைகள் ‘எஸ்கேப்' என பரவும் வதந்தி - தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம்
சாத்தனுாரில் 150 முதலைகள் ‘எஸ்கேப்' என பரவும் வதந்தி - தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம்
பரவிய செய்தி:-
சாத்தனூர் அணை மற்றும் முதலை பண்ணையிலிருந்து பெண்ணையாற்றில், 150க்கும் மேற்பட்ட முதலைகள் வெளியேறியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது' என்று தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
உண்மை என்ன?
இது முற்றிலும் பொய்யான செய்தி.
சாத்தனூர் வன உயிரின் சரகத்தில், இன்றைய நிலையில் 302 முதலைகள் நல்ல நிலையில் உள்ளது. பெஞ்சல் புயலின் தாக்கத்தால் சாத்தனூர் அணை திறப்பின்போது வனத்துறை கட்டுப்பாட்டில் முதலை பண்ணையில் உள்ள முதலைகள் எதுவும் பண்ணையை விட்டு வெளியேறவில்லை.
சாத்தனூர் அணையின் மேற்பகுதியிலிருந்து வெளியேறிய இரு முதலைகள் மீட்கப்பட்டு. நீர் பிடிப்பு பகுதியில் விடப்பட்டுள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் சாத்தனூரில் 150 முதலைகள் வெளியேறியதாகக் கூறுவது உண்மைக்கு மாறானது" என்று மாவட்ட வன அலுவலர்(திருவண்ணாமலை வனக்கோட்டம்) விளக்கம் அளித்துள்ளார்.
இதேபோல், 'சாத்தனூர் அணை முதலை பண்ணையிலிருந்து 150க்கு மேற்பட்ட முதலைகள் தப்பியதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது' என்று சாத்தனூர் அணையின் உதவிப் பொறியாளர் விளக்கமளித்துள்ளார்.என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்துள்ளது
Tags: FACT CHECK மறுப்பு செய்தி மார்க்க செய்தி
