சம்பால் ஷாஹி ஜமா மசூதியில் ஆய்வு நடத்த தடை உச்சநீதிமன்றம் உத்தரவு
உத்தரபிரதேச மாநிலம் சம்பாலில் உள்ள ஷாஹி ஜமா மசூதி இந்து கோவிலை இடித்து கட்டப்பட்டதாக சிவில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், மசூதியை ஆய்வு செய்ய அனுமதி அளித்த விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமையன்று அதன் நிர்வாகக் குழுவை கேட்டுக் கொண்டது.இந்திய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், உயர் நீதிமன்றம் தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்கும் வரை இந்த விஷயத்தை தொடர வேண்டாம் என்று சர்வேயை அனுமதித்த சிவில் நீதிபதி (மூத்த பிரிவு) நீதிமன்றத்திடம் கேட்டுக் கொண்டது
உத்தரப்பிரதேசம் மாநிலம் சம்பாலில் உள்ள ஷாஹி ஜமா மசூதி மொகலாயர்களின் ஆட்சிக்காலத்தில் இந்து கோவிலை இடித்து மசூதி கட்டியிருப்பதாக விஷ்ணு சங்கா் ஜெயின் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சம்பல் சிவில் நீதிமன்றம் மசூதியில் ஆய்வு நடத்த உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின்படி இரு தரப்பினரின் முன்னிலையில் நீதிமன்ற ஆணையா் கடந்த நவ. 5 மசூதியில் ஆய்வு நடத்தினாா். நீதிமன்ற ஆணையா் தனது அறிக்கையை நீதிமன்றத்தில் நேரடியாக தாக்கல் செய்வாா் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலை ஜாமா மசூதியில் ஆய்வு செய்ய இரண்டாவது முறையாக ஆய்வுக் குழுவினர் சென்றுள்ளனர். அப்போது மசூதி அருகே நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து, மசூதியில் ஆய்வு செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை கலைந்து செல்லும்படி போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆனால் தொடர்ந்து முழக்கமிட்ட போராட்டக்காரர்கள், வன்முறையில் ஈடுபட்டனர். அதிகாரிகள் மீது கற்களை வீசி தாக்கினர். வாகனங்களுக்கும் தீ வைத்தனர். இதனால் பதற்றம் உருவானது
இந்த கலவரத்தில் 5 பேர் உயிரிழந்தனர் மேலும் 50 பேர் காயமடைந்தனர் , இந்த வழக்கில் மசூதி நிர்வாகம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது
வழக்கில்:-
16 ஆம் நூற்றாண்டிலிருந்து மசூதி இருந்து வருவதாகவும், முஸ்லிம்கள் வழிபாட்டுத் தலமாக தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளதாக வாதிடப்பட்டது
மேலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட 19ம் தேதி அதே நாளில் மசூதியின் கணக்கெடுப்புக்கு ஒரு வழக்கறிஞர் கமிஷனரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அனுமதித்தது ஏன் ? மேலும் எங்கள் தரப்பில் எந்த வித கருத்தையும் கேட்கவில்லை . என்றும் அதில் வாதிடபட்டது. அதேபோல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குள், வக்கீல் கமிஷனர், வாதிகளின் வக்கீல்கள் மற்றும் போலீஸ் படையுடன் மசூதிக்கு வந்து மாலை 6 மணிக்கு தொடங்கிய கணக்கெடுப்பு இரவு 8.30 மணி வரை தொடர்ந்ததாக பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவித்தது
மேலும் நவம்பர்
24 ஆம் தேதி காலை இரண்டாவது கணக்கெடுப்புக்காக குழு வந்து, விடியற்காலை
தொழுகைக்காக மசூதியில் இருந்த வழிபாட்டாளர்களை வளாகத்தை விட்டு
வெளியேறுமாறு கூறினார்கள் அதைத் தொடர்ந்து திடீரென ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது,
அப்பகுதியில் வசிப்பவர்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியது, இது அவர்களை
அவர்களின் வீட்டிற்கு வெளியே கொண்டு வந்தது. என பள்ளிவாசல் நிர்வாகம்
தெரிவித்தது, அதனை தொடர்ந்து
மசூதி ஆய்வு தொடர்பான விவகாரத்தில் கீழமை நீதிமன்றம் எந்த புதிய உத்தரவையும் பிறப்பிக்கக்கூடாது. மேலும் கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்கிறோம்.
வழக்கு தொடர்பாக ஷாஹி ஈத்கா ஜாமா மசூதி கமிட்டி, அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கும் வரை இந்த உத்தரவு தொடரும் என்று தெரிவித்தனர்.
Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி