Breaking News

காபி தோட்டத்தில் திடீரென நுழைந்த காட்டுயானை மரங்களில் ஏறிய தொழிலாளர்கள் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

காபி தோட்டத்தில் திடீரென நுழைந்த காட்டுயானை பயத்தில் மரங்களில் ஏறிய தொழிலாளர்கள் வைரல் வீடியோ




நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள தனியார் தேயிலை மற்றும் காபி எஸ்டேட் பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.அவர்கள் காபி தோட்டத்தில் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு காட்டுயானை ஒன்று வந்தது. பின்னர் திடீரென தொழிலாளர்களை துரத்த தொடங்கியது. இதை சற்றும் எதிர்பாராத தொழிலாளர்கள் அலறியடித்துக்கொண்டு கூச்சலிட்டபடியே ஓட்டம் பிடித்தனர்.

காட்டு யானையின் தாக்குதலில் இருந்து தப்பிக்க சில தொழிலாளர்கள் அங்குள்ள மரங்களில் ஏறினர். இதை கண்ட காட்டுயானை அந்த மரங்களின் அடியிலேயே முகாமிட்டு நின்றது. ஆனால் தொழிலாளர்களோ, மரங்களை விட்டு கீழே இறங்கவே இல்லை.பின்னர் அங்கிருந்து யானை சென்று விட்டது. அதன் பிறகு தொழிலாளர்கள் கீழே இறங்கி தப்பித்தால் போதும் என்று ஓடிவிட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகின்றது.


வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1862392642761630202

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback