சென்னை கொளத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுக்கா - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
அட்மின் மீடியா
0
சென்னை கொளத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் வட்டத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு
கொளத்தூர் சட்டமன்ற தொகுதி கொளத்தூரை தலைமை இடமாக கொண்டு புதிய வருவாய் வட்டத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது.
இதன்படி அயனாவரம் வருவாய் வட்டத்தில் இருந்து கொளத்தூர் வருவாய் வட்டம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. 6.24 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கொளத்தூர் வட்டத்தில் கொளத்தூர், பெரவள்ளூர், சிறுவள்ளூர் உள்ளிட்ட மூன்று கிராமங்களை கொண்டு தனி வட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது
உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்
Tags: தமிழக செய்திகள்
