தமிழகத்தில் பிறை தென்படாததால் வியாழக்கிழமை அன்று பெருநாள் தலைமை காஜி அறிவிப்பு ramzan tamil nadu 2024
அட்மின் மீடியா
0
தலைமை காஜியின் அறிவிப்புப்படி இன்று 09-04-2024 செவ்வாய்கிழமை பிறை தென்படாததால் 11.04.2024 ம் தேதி, வியாழக்கிழமை புனிதமிகு "ஈதுல் ஃபித்ரு" பெருநாள் மற்றும் "ஷவ்வால்" மாத முதல் பிறையாகும் என்று தலைமை காஜி அறிவிப்பு அறிவித்துள்ளார்
அனைவருக்கும் புனிதமிகு ஈதுல் ஃபித்ரு பெருநாள் நல்வாழ்த்துகளை துஆ செய்தவனாக தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழகத்தில் பிறை தென்படாததால் வியாழக்கிழமை அன்று பெருநாள் தலைமை காஜி அறிவிப்பு
தமிழகத்தில் ஷவ்வால் மாதம் பற்றிய அறிவிப்பு.
ஹிஜ்ரி(1445) ஷவ்வால் மாதத்தின் முதல்பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளான இன்று 09-04-2024 செவ்வாய்க்கிழமை மஹ்ரிப் நேரத்தில் தமிழ்நாட்டில் எங்கும் பிறை தென்பட்டதாக எந்த தகவலும் வரவில்லை. பிறை தென்படவில்லை என்பதால் நபிவழி அடிப்படையில் ரமலான் மாதம் 30 ஆக நிறைவு பெறுகிறது.
எனவே, நாளை மறுநாள் 10-04-2024 வியாழக்கிழமை மஹ்ரிபில் இருந்து தமிழ்நாட்டில் ஷவ்வால் மாதத்தின் முதல்பிறை (ஈதுல் ஃபித்ர்) ஆரம்பமாகின்றது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஸதகத்துல் ஃபித்ரு விபரம்
ஹனபி :-
1 கிலோ 633 கிராம் கோதுமை, அல்லது அதற்கான கிரயம். இவ்வாண்டு அதன் கிரயம் ரூபாய் 90/- என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
ஷாபிஈ :-
2 கிலோ 400 கிராம் கோதுமை அல்லது அரிசி. பொருளாக மட்டும் கொடுக்க வேண்டும். கிரயம் கொடுக்கக் கூடாது.
Tags: மார்க்க செய்தி