Breaking News

நீட் தேர்வு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்க்கு தேர்வு மையம் வெளியீடு உடனே சரிபாருங்க முழு விவரம்

அட்மின் மீடியா
0

நீட் தேர்வு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்க்கு தேர்வு மையம் வெளியீடு உடனே சரிபாருங்க முழு விவரம்

இந்தியா முழுவதும் இளநிலை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவு தேர்வு மே 5ம் தேதி நடைபெற உள்ளதாக நீட் தேர்வு முகமை அறிவித்துள்ளது.

தற்போது மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமைய இருக்கிறது என்பதற்கான விவரம் வெளியிடப்பட்டுள்ளது. 

முதுகலை நீட் தேர்வுஅதன்படி, 2024-25ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மே 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான சிட்டி இன்டிமேஷன் www.nta.ac.in என்ற இணையதளத்தில் வெளியாகி உள்ளது. 

அதில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்கள், நீட் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தங்களது தேர்வு மையம் எந்த நகரத்தில் அமைய உள்ளது என்பதை உறுதி செய்து பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளலாம். 

விரைவில், நீட் தேர்வுக்கான நுழைவு சீட்டும் என்டிஏ இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நுழைவு சீட்டையும் பிரிண்ட் எடுத்து மாணவர்கள் வைத்துக் கொள்ள வேண்டும்.நீட்இந்நிலையில் ஒரு மாணவர் ஒருமுறை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 

நீட் தகுதி தேர்வு மொத்தம் 3 மணி நேரம் 20 நிமிடம் நடைபெறும். தேர்வு முடிவுகள் ஜூன் 14ம் தேதி வெளியிடப்படும் என தேர்வு முகமை அறிவித்துள்ளது. 

இது குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் 011- 40759000 என்ற தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் மூலம் தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு மையம் சரி பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://neet.ntaonline.in/frontend/web/advancecityintimationslip/index

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback