Breaking News

புதுக்கோட்டை கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த நெய்னா முகம்மது வெட்டி கொலை - குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு!

அட்மின் மீடியா
0
புதுக்கோட்டை கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த நெய்னா முகம்மது கொலை குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு!

கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த நெய்னா முகம்மது கொலை செய்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கும் வரை உடலை உறவினர்கள் வாங்க மறுத்ததால் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.



புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டினம் சின்னப்பள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் நைனா முகமது (வயது 42). இவர் மீமிசலில் ஜூஸ் கடையை நடத்தி வந்தார். இவருடைய மனைவி ரம்ஜானியா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்தநிலையில் கடந்த 22-ந் தேதி இரவு கோபாலப்பட்டிணம் அருகே தலையில் காயம் ஏற்பட்டு நைனா முகமது இறந்து கிடந்தார். மேலும், நைனா முகமதுவை மர்ம ஆசாமிகள் அடித்துக்கொலை செய்ததாக கூறி அவரது உறவினர்கள் நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நைனா முகமது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவரது உடலை போலீசார் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். ஆனால் அவர்கள் நைனா முகமதுவை கொலை செய்தவர்களை கைது செய்யும் வரை அவரது உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறினர். இதனால் நைனா முகமது உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் வைக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை:-

புதுக்கோட்டை மாவட்டம், கோபாலப்பட்டினம்  நைனா முகம்மதுவை படுகொலை செய்த, குற்றவாளிகளை உடனே கைது செய்து, நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசிற்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை வைத்துள்ளது

அமைதி மாநிலமான தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம், கோபாலப்பட்டினம் நைனா முகமது அவர்களின் படுகொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா, கோபாலப்பட்டினம் கிராமத்தைச் சார்ந்த குலாம் ரசூல் அவர்களின் மகன் நைனா முகமது. இவர் மீமிசலில் நேஷனல் கூல்ட்ரிங்க்ஸ்  என்ற பெயரில் கடை நடத்தி வந்தார். இவர் 22.04.2024 இரவு 11 மணிக்கு மேல் தனது கடையை அடைத்துவிட்டு, மீமிசலிலிருந்து தனது ஊரான கோபாலபட்டினத்திற்கு, ஊரின் முக்கியச் சாலை வழியாக  செல்லும்பொழுது, நள்ளிரவில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது திட்டமிட்ட படுகொலையாகத் தெரிகிறது. 

இந்த செயல் இப்பகுதி மக்களிடத்தில் கடும் கொந்தளிப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

படுகொலை செய்யப்பட்ட நைனா முகமதுவிற்கு ஒரு பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர். அவரின் குடும்பத்தினர் கடுமையான மன அழுத்தத்திலும், ஆதரவற்றும் நிற்கின்றனர்.

நைனா முகம்மதின் இழப்பினால் வாடும் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். மேலும் அவரை படுகொலை செய்த குற்றவாளிகளை துரிதமாக கைது செய்து, உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும், நீதியை தாமதம் இன்றி பெற்றுத் தருமாறும் தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறோம். என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை வைத்துள்ளது

SDPI கட்சி வலியுறுத்தல்:-

புதுக்கோட்டை மாவட்டம் கடற்கரை சாலை பகுதிகளில் தொடரும் கொலைகள் - காவல்துறை சட்ட ஒழுங்கை பாதுகாக்க தவறுகிறது துரிதமாக குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த - SDPI கட்சி வலியுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தைச் சேர்ந்த நைனா முகம்மது என்பவர் கடந்த திங்கள் கிழமை கொலை செய்யப்படுள்ளார்.

மீமிசலில் நேஷனல் ஷாப் & கூல்டிரிங்க்ஸ் என்ற கடையை நடத்தி வரும் இவர் வழக்கம்போல கடந்த திங்கள் கிழமை இரவு 11.30 மணியளவில் கடையை அடைத்து விட்டு வீடு திரும்பியிருக்கிறார். வீடு திரும்பும் வழியில் கோபலப்பட்டினம் பிரதான சாலையில் காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று கொடூரமான ஆயுதங்களை கொண்டு அவரை தாக்கி கொலை செய்துள்ளது.

இச்சம்பவம் அந்த பகுதியில் வாழும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிய காவல் துறையின் மீது கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ECR பகுதிகளிலும் தொடர்ந்து கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளது. இதனை தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து மக்கள் அச்சமின்றி வாழ மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கேட்டு கொள்வதோடு காவல்துறையின் இந்த மெத்தன போக்கை வண்மையாக கண்டிக்கிறோம்.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட  குற்றவாளிகளை விரைந்து கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி நடவடிக்கை எடுக்கும்படி SDPI கட்சியின் சார்பில் வழியுறுத்திகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மனிதநேய ஜனநாயக கட்சி கோரிக்கை:-

நைனா முகமது படுகொலை குற்றவாளிகளை விரைந்து கைது செய்து நீதியை நிலைநாட்ட வேண்டும் தமிழக அரசுக்கு மனிதநேய ஜனநாயக கட்சி கோரிக்கை

தாலுகா நாட்டாணி புரசக்குடி பஞ்சாயத்துக்குட்பட்ட கோபாலப்பட்டினம் குலாம் ரசூல் மகன் நைனா முகமது. இவர் மீமிசலில் நேஷனல் பழச்சாறு கடை நடத்தி வந்தார். கடையை அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்ற நைனா முகம்மது நள்ளிரவில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இது திட்டமிட்ட படுகொலையாகத் தெரிகிறது. இச்சம்பவம் மக்களிடத்தில் கடும் கொந்தளிப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே நைனா முகம்மதின் இழப்பினால் வாடும் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை படுகொலை செய்த குற்றவாளிகளை துரிதமாக கைது செய்து உச்சபட்ச தண்டனை வழங்கி நீதியை நிலைநாட்ட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் கோரிக்கை:-

தமிழக அரசே!! காவல்துறையே!!  கொலைகுற்றவாளிகளை கைது செய்!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் தாலூகா கோபாலப்பட்டிணம் கிராமத்தை சேர்ந்தவர் நைனா முகமது என்பவர் மீமிசல் கடை வீதியில் நேஷனல் ஷாப்& கூல்டிரிங்ஸ் எனும் பெயரில் கடை நடத்தி வருகிறார்.இவர் 22.04.2024 அன்று திங்கட்கிழமை இரவு 11.45 மணியளவில் கடையை அடைத்து விட்டு அவருடைய வீட்டிற்கு செல்லும் வழியில் கோபாலப்பட்டிணம் பிரதான சாலையில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த அச்சத்தையும், மிகப்பெரிய வேதனையும் ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற கொடுரமான கொலைகளால் தமிழகத்தின் சட்ட ஒழுங்கு கேள்விகுறியாகிறது.

எனவே தமிழக காவல்துறை உரியநடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்திகள்

Give Us Your Feedback