Breaking News

வரலாறு காணாத கனமழையால் தத்தளிக்கும் ஐக்கிய அரபு அமீரகம், 18 பேர் பலி, வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை

துபாய் சர்வதேச விமான நிலையம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்ததால், விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் நாடுகளில் பெய்து வரும் கனமழை காரணமாக துபாய், ஷார்ஜா, உள்ளிட்ட நகரங்களுக்கு சென்னையில் இருந்து செல்லும் 5 விமானங்கள் ரத்து.



ஐக்கிய அரபு அமீரகம்:- ஏப்ரல் 16ம் தேதி செவ்வாய்க்கிழமை வரலாறு காணாத பெருமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. துபாயின் அடையாளங்களான துபாய் மால், எமிரேட்ஸ் மால் ஆகிய வணிக வளாகங்களுக்கும் மழை நீர் புகுந்தது. துபாயின் மெட்ரோ ரயில் நிலையத்திலும் தண்ணீர் புகுந்து சேவை பாதிக்கப்பட்டது.

அரேபிய தீபகற்ப பகுதியைக் கடந்து சென்ற மிகப் பெரிய புயலே இந்த பெருமழைக்குக் காரணம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பஹ்ரைனிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. 

ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், கத்தார் நாடுகளிலும் புயல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓமனில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. 

பள்ளிகள், கல்லூரி மாணவர்கள் வீட்டிலிருந்தே கல்வியை தொடரவும் அலுவலக ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அபாயகரமான காலநிலை முன்னறிவிக்கப்பட்டதை அடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், தொடரும் கன மழையுடனான காலநிலையால் சில பகுதிகளில் மஞ்சள் எச்சரிக்கையும், சில பகுதிகளில் செம்மஞ்சள் எச்சரிக்கையும் குறிப்பிட்ட சில பகுதிகளில் சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

துபாயில் செவ்வாய் இரவு முதலே மழை குறைந்தாலும் கூட இன்று (புதன்கிழமையும்) ஆங்காங்கே லேசான மழை நீடிக்கும் என்று கூறப்படுகிறது. 

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/shanthosh/status/1780481048968855877

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/KHByte/status/1780264881419395500

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/Muthuhere3/status/1780291554751529400

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback