Breaking News

கிராம நத்தம் நிலத்திற்கு பட்டா மாற்ற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் முழுவிவரம்

அட்மின் மீடியா
0

கிராம மக்கள் தங்களிடம் உள்ள நத்தம் வீட்டுமனைக்கு பட்டா பெறுவதில் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விதமாக இணையவழி பட்டா மாறுதல் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தள்ளார்.



நத்தம் நில ஆவணங்களை இணையவழி சேவைக்கு கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் நத்தம் நிலங்களில் பட்டா மாறுதல் செய்வது, உட்பிரிவு செய்வது ஆகியவை தொடர்பான மனுக்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். பொது சேவை மையங்கள் மூலமும் விண்ணப்பிக்கலாம்.இதனால் எந்த நேரத்தில் எந்த இடதிதல் இருந்தாலும் ஆன்லைன் முறையில் நத்தம் அ-பதிவேடு, சிட்டா மற்றும் புல வரைப்படங்கள் போன்ற ஆவணங்களை பதிவிறக்கம் செய்ய முடியும்

'நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம்' இப்போது நடைமுறைக்கு வருகிறது.கிராம நத்தம் நில பட்டாக்கள் புறம்போக்கு நிலங்களாக கருதப்படுவதால், அந்த நிலங்களை அனுபவ ஸ்வாதீன இடங்களாக கருதி, பல ஆண்டுகளாக அங்கு மக்கள் வாழும் மக்களுக்கு வழங்க 1991ல் முடிவு செய்யப்பட்டது. அந்தப் பட்டாக்கள் இதுவரை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படாமல் இருந்தன.பின்னர், அவற்றை கணக்கீட்டு ஆன்லைனில் பதிவு செய்யும் முறை தொடங்கியது. இப்போது ஆன்லைனிலேயே நத்தம் பட்டா மாறுதல் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்

இதற்கு eservices.tn.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அடையாளச் சான்று உள்ளிட்ட தேவையான ஆவணங்களுன் விண்ணப்பிக்க வேண்டும். 

Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback