தமிழ்நாட்டில் குழந்தைகள் கடத்தல் என பரப்பப்படும் இந்த வீடியோக்கள் உண்மையில்லை தமிழக அரசு உண்மை சரிபார்ப்பு குழு அறிவிப்பு
தமிழ்நாட்டில் குழந்தைகள் கடத்தல் என பரப்பப்படும் இந்த வீடியோக்களை நம்பவோ, பரப்பவோ வேண்டாம் என 'உண்மை சரிபார்ப்புக் குழு' வீடியோ வெளியிட்டுள்ளது
மேலும் தவறான தகவல்களைப் பரப்புவது குற்றச் செயலாகும் எனவும் கேட்டுகொள்கின்றது
தற்போது வாட்ஸப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ ஒன்று குழந்தைகளை கடத்தி உறுப்புகளை விற்கின்றார்கள் என சில வீடியோக்களின் தொகுப்பை ஒன்றினைத்து பரப்பி வருகின்றார்கள்
ஆனால் அந்த வீடியோக்கள் பல்வேறு காலகட்டத்தில் பல நாட்டில் இருந்தும் வெளிமாநிலங்களில் நடந்த விபத்துகளின் நடந்த சில வீடியோக்கள் ஆகும்
எனவே யாரும் அதனை நம்பவேண்டாம் என தமிழக அரசின் உண்மை சரிபார்க்கும் குழு வீடியோ வெளியிட்டுள்ளது
மேலும் இது சம்மந்தமாக தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்
சமீப காலமாக சில நபர்கள். குழந்தைகளை கடத்த முயற்சிப்பது போன்ற பொய்யான காணொலிகள் சமூக வலைதளங்களில் வேமாக பரவி வருவதை காண முடிகிறது. இதுபோன்ற காணொலிகள் மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் உருவாக்க வேண்டுமென்ற பிரதான எண்ணத்துடனும், சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்துடனும் பரப்பப்பட்டு வருகின்றன என்பதினை சென்னை பெருநகர காவல் உறுதிபட தெரிவித்து கொள்கிறது.
இதுபோன்ற பொய்யான செய்திகளை பரப்புவோர் உடனடியாக இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், மீறினால் அத்தகையோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை பெருநகர காவல் துறை எச்சரிக்கிறது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://twitter.com/tn_factcheck/status/1762104975218606122
Tags: FACT CHECK