Tamilnadu Private Job Fair 2023 தமிழகத்தில் 16ம் தேதி நடக்கும் வேலை வாய்ப்பு முகாம்கள் எந்த எந்த மாவட்டங்கள் தெரியுமா
தமிழகம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி வருகின்றார்கள் தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு உதவும் வகையில் மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் வாயிலாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இம் முகாமில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப இருக்கிறது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, கல்வி முடித்தோர், பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளும், தையற் பயிற்சி, நர்சிங் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெறலாம்.
தமிழகத்தில் உள்ள வேலையில்லா இளைஞர்களுக்காக மாவட்டந்தோறும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பாக டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
இம்முகாமில் தொழில்துறை. சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த 150-க்கும் மேற்ப்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். அயல்நாட்டு வேலைவாய்ப்பிற்கான பதிவு வழிகாட்டல், சுயதொழில், வங்கி கடன் உதவிகள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து பிரத்தியேக அரங்கம் அமைத்து ஆலோசனை அளிக்கப்பட உள்ளது. மேலும், மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இத்தனியார்துறை முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ. டிப்ளமோ, பி.இ. நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித்தகுதியுடைய முதல் 18 40 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை, பாஸ்போட் அளவு புகைப்படம் மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மேலும், வேலைநாடும் இளைஞர்கள் "தமிழ்நாடு தனியார்துறை வேலை இணையம்" (Tamil Nadu Private Job Portal) www.tnprivatejobs.tn.gov.in வாயிலாக பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒரே இடத்தில் பல்வேறு நிறுவனங்களின் நேர்காணலில் கலந்து கொண்டு தாங்கள் விரும்பும் வேலைவாய்ப்பினை பெற இது நல்ல வாய்ப்பு என்பதால் இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு:-
https://www.tnprivatejobs.tn.gov.in/Home/job_mela
ஈரோடு மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம் நாள்:- 16.12.2023
வேலூர் மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம் நாள்:- 16.12.2023
மதுரை மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம் நாள்:- 16.12.2023
கிருஷ்ணகிரி மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம் நாள்:- 16.12.2023
சிவகங்கை மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம் நாள்:- 16.12.2023
அரியலூர் மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம் நாள்:- 16.12.2023
Tags: வேலைவாய்ப்பு