Kerala woman without hands gets four wheeler driving license இரண்டு கைகளும் இல்லாமல் கார் ஓட்டி லைசன்ஸ் வாங்கிய பெண் வைரல் வீடியோ
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே கரிமண்ணுார் நெல்லானிக்காடு பகுதியைச் சேர்ந்த தாமஸ், அன்னகுட்டி தம்பதியின் இரண்டாவது மகள் Jilumol Mariet ஜிலுமோள் மரியட் மாற்றுத்திறனாளி ஜிலுமோளுக்கு வயது 32 ஆகும்
மேலும் இவருக்கு பிறப்பிலேயே இரண்டு கைகளும் இல்லை. ஆனாலும் மனம் தளராமல் வாழந்து வரும் இவர் தன் அசாத்திய திறமையால் கிராபிக்ஸ் டிசைனர் பணியை செய்து வருகிறார்.
மேலும் சிறுவயது முதலே கடும் பயிற்ச்சி எடுத்து தனது கால்களாலேயே காரை ஓட்டவும் பயிற்சி எடுத்துள்ளார். காருக்குள் அமர்ந்த கால்களாலேயே சீட் பெல்ட் போட்டு, கார் சாவியை ஸ்டார்ட் செய்து அவர் அசால்ட்டாக காரை ஓட்டி செல்கின்றார்
இவர் கார் ஓட்ட எர்ணாகுளத்தில் பயிற்சிபள்ளியில் டிரைவிங் கற்றார்.தொடுபுழா ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் டிரைவிங் லைசென்ஸ் பெற, 2017ல்விண்ணப்பித்தபோது கைகள் இல்லை எனக்கூறி நிராகரித்தனர்.ஜிலுமோள் கேரள உயர் நீதிமன்றத்தை அணுகினார். விண்ணப்பத்தை பெற்று நடவடிக்கை எடுக்குமாறு மோட்டார் வாகன துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இருப்பினும், காரைஜிலுமோள் கால்களால் ஓட்டுவதற்கு வசதியாக வடிவ மாற்றம் செய்யும்படி மோட்டார் வாகன துறையினர் தெரிவித்தனர்.வடிவத்தை மாற்றிய போதும் லைசென்ஸ் வழங்கமறுத்தனர்.இப்பிரச்னையில் மாநில மாற்றுத் திறனாளி ஆணையம் தலையிட்டது. அதன்பின்பு ஜிலுமோல் கால்களால் காரை இயக்குவதற்கான வசதிகளைக் கொண்ட காரை வடிவமைக்க பரிந்துரைத்தனர். அதன்பின்பு கால்களால் இயக்ககூடிய பிரத்யேகமாக மாருதி சுஸுகி செலிரியோ காரை, ஜிலுமோலுக்கு ஏற்றவாறு மாற்றம் செய்து தற்போது வழங்கி இருக்கின்றது.
காரின் முக்கிய கன்ட்ரோல்கள் அனைத்தும் கால்களால் கட்டுப்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, சில கன்ட்ரோல்களை குரல் கட்டளையால் கட்டுப்படுத்தும் வகையிலும் அவர்கள் மாற்றிக் கொடுத்திருக்கின்றனர்.அதன் பின்பு கட்டாய ஓட்டுநர் சோதனைகளில் தேர்ச்சி பெற்றார் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின் விதிகளின் கீழ் அவருக்கு உரிமம் வழங்கப்பட்டது.கேரள முதல்வர் பினராயி விஜயன் பாலக்காட்டில் சனிக்கிழமை மேரிட் என்பவருக்கு ஓட்டுநர் உரிமத்தை வழங்கினார்.
காலில் கார் ஓட்டும் வீடியோ பார்க்க:-
https://www.youtube.com/watch?v=EsiI1DsW0oE
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ