kerala covid news கேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா அதிர்ச்சி ரிப்போர்ட்
இந்திய அளவில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கேரளாவில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. அதன்படி கடந்த மாதம் 479 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இம்மாத துவக்கத்தின் முதல் 8 நாட்களிலேயே 825 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் கேரள மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 230 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது இதுவரை பதிவான மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 949 ஆக உயர்ந்துள்ளது நோய் தொற்று பரவாமல் தடுக்க மாநில அரசு அனைத்து வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.எனினும், கடந்த 10 நாட்களில் கொரோனா தொற்று ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்தியளவில் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்படும் 90% பேர் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்னும் அதிர்ச்சி ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சுவாச கோளாறுகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் kerala covid kerala covid news நோயாளிகளிடம் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்படுகிறது. காய்ச்சல், இருமல், சளி, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கொரோனா பரவல் குறித்து பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம். வைரஸ் தொற்றுநோய்களைத் தவிர்க்க பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும்.என மாநில சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது
சுவாச கோளாறுகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளிடம் கொரோனா தொற்று கண்டறியப்படுகின்றன. பெரும்பாலான பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்படவில்லை. மாறாக கோவிட் தொற்றே உறுதிசெய்யப்படுகின்றது. வளிமண்டல மாசுபாடு மற்றும் காலநிலை மாற்றத்தால், கொரோனா தொற்றின் அறிகுறிகள் தீவிரமடைந்து வருவதைக் காண முடிகிறது” என்று அம்மாநில மருத்துவர் சன்னி தெரிவித்துள்ளார்.
Tags: இந்திய செய்திகள் கொரானா செய்திகள்