Breaking News

Google has removed 17 apps உளவு பார்த்த 17 ஆப்கள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம் இந்த ஆப்ஸ் உங்க மொபைலில் இருக்கா உடனே பாருங்க

அட்மின் மீடியா
0

Google has removed 17 apps உளவு பார்த்த 17 ஆப்கள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம் இந்த ஆப்ஸ் உங்க மொபைலில் இருக்கா உடனே பாருங்க

இந்த ஆப்களுக்கு ஸ்பைலோன்’ (SpyLoan) என பெயர் வைக்கப்பட்டுள்ளது]

கூகுளின் ஆப் டிஃபென்ஸ் கூட்டணியின் (Google App Defense Alliance) ஒரு பகுதியாக இருக்கும் இஎஸ்இடி (ESET) என்கிற சாப்ட்வேர் நிறுவனம் அளித்தத் தகவலின் படி, கடன் கொடுக்கும் செயலிகளாக அறிமுகமாகி, மிரட்டல் செயலிகளாக மாறுவதாகக் கூறப்படுகிறது. 

இதில் 17 செயலிகள் முற்றிலும் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. 

இந்த செயலிகளை யாரேனும் பதிவிறக்கம் செய்திருந்தால் அவற்றை அவர்களே தாங்களாக நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது.

இத்தகையை ஆப்ஸ்கள் பயனர்கள் மீதான நம்பிக்கையை பயன்படுத்தி, பயனர்களை ஏமாற்றி அவர்களின் தனிப்பட்டத் தகவல்களைத் திருடி விடுகின்றன. இந்த ஆப்ஸ்பைகளை இன்ஸ்டால் செய்ததும் ஸ்டோரேஜ் முதல் லொகேஷன் வரை பல பெர்மிஷன்கள் கேட்கும்.

அதனை நீங்கள் அனுமதித்ததும், லோன் அப்ளிகேஷன்கள் உங்கள் மொபைலில் இருக்கும் எஸ்எம்எஸ், புகைப்படங்கள் மற்றும் ப்ரொவ்சிங் ஹிஸ்டரி உட்பட பலதரப்பட்ட தகவல்களைத் திருடிவிடும். அதுமட்டுமல்லாமல் இது லோன் வாங்கும் ஆஃப் என்பதால் நீங்கள் கடன் வாங்குவீர்கள்.

நீங்கள் அந்த பணத்தைத் தர தாமதமானால், நீங்கள் வாங்கும் கடனுக்கு அதிக வட்டித் தொகையுடன் சேர்த்து பணத்தைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று உங்களிடம் இருந்து திருடப்பட்ட தகவல்களை வைத்து மிரட்டல் விடுக்கவும் இந்த ஆப்ஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

AA Kredit, 

Amor Cash, 

Guayaba Cash, 

Easy Credit, 

Cashwow, 

CrediBus, 

FlashLoan, 

Préstamos Crédito, 

Préstamos De Crédito-YumiCash, 

Go Crédito, 

Instantáneo Préstamo, 

Cartera Grande, 

Rápido Crédito,

Finupp Lending, 

4S Cash, 

TrueNaira, 

EasyCash 

ஆகிய 17 லோன் ஆப்ஸ்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback