Breaking News

தென்மாவட்டங்களில் பெய்யும் கனமழை எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.. முழு விவரம்

அட்மின் மீடியா
0

தென்மாவட்டங்களில் பெய்யும் கனமழை எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.. முழு விவரம்

தென்கிழக்கு அரபிக்கடல், அதனை ஒட்டிய மாலத்தீவு கடற்பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கேரளா மற்றும் கேரளம் ஓட்டிய தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் முன்னதாக எச்சரிக்கை விடுத்தது இருந்தது

இதனால் இன்று 09.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (9.12.2023) விடுமுறை என அறிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது


தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.9) விடுமுறை அறிவிப்பு!

அதேபோல் சென்னை மாவட்டம் முழுவதும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் ஆகிய 4 மாவட்டங்களில் திங்கள் கிழமை தான் அப்பகுதி பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback