நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த 2 பேர் நடந்தது என்ன வீடியோ முழு விவரம்
நாடாளுமன்ற மக்களவையில் பார்வையாளர் மாடத்தில் இருந்து குதித்து நுழைந்த 2 பேர் , சர்ச்சைக்குரிய பொருளை வீசியதால் புகை எழுந்தது உடனடியாக நாடாளுமன்ற பாதுகாவலர்கள் அவர்களை கைது செய்தார்கள்
அவர்கள் வீசிய பொருள் என்ன என்பது குறித்து விசாரணை தொடர்து நடந்து வருகின்றது இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது
நாடாளுமன்ற மக்களவையில் பார்வையாளர் மாடத்தில் இருந்த ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் இருவரும் அவைக்குள் குதித்து எம்.பி.க்களின் இருக்கைகள் மீது தாவிச் சென்று வண்ணப் புகை வெளியேற்றக்கூடிய சர்ச்சைக்குரிய பொருளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் அவசர அவசரமாக அவை ஒத்திவைக்கப்பட்டது. இருவரையும் பிடித்து நாடாளுமன்ற காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.
நாடாளுமன்ற மக்களவையில் பார்வையாளர் மாடத்தில் இருந்த இருவர், அவைக்குள் குதித்து எம்.பி.க்களின் இருக்கைகள் மீது தாவிச் சென்று வண்ணப் புகை வெளியேற்றக்கூடிய சர்ச்சைக்குரிய பொருளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மக்களவைக்கு வெளியே இருவரும் பிடிபட்டுள்ளனர்.
இதில் நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த 2 நபர்கள் பெயர் சாகர் சர்மா மற்றும் நீலம் என தெரிய வந்துள்ளது
மேலும் அந்த இருவருக்கும், மைசூரு பாஜக எம்.பி ப்ரதாப் சிம்ஹா, பார்வையாளர் நுழைவு அனுமதிச் சீட்டு வழங்கியுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது
அதேபோல் நாடாளுமன்றத்துக்கு வெளியே பிடிபட்ட இருவர் பெயர் மணோ ரஞ்சன், அன்மோல் ஷின்டே ஆகியோர் பிடிபட்டுள்ளனர். இதில் நீலம் என்பவர் அரியானாவை சேர்ந்தவர், அமோல் ஷிண்டே மகாராஷ்டிராவை சேர்ந்தவராவார்
மொத்தம் 4 நபர்களை கைது செய்துள்ள போலீசார் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றார்கள்
வீடியோ பார்க்க கிளிக் செய்யவும்
https://twitter.com/news24tvchannel/status/1734842149383090355
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்