Breaking News

சிறைவாசிகள் வீட்டில் உள்ளவர்களுடன் பேச வீடியோ காலிங் வசதிக்கு அனுமதி அரசாணை வெளியீடு

அட்மின் மீடியா
0

சிறைவாசிகள் வீட்டில் உள்ளவர்களுடன் பேச வீடியோ காலிங் வசதிக்கு அனுமதி அரசாணை வெளியீடு

                                                 

இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-

சிறைவாசிகளுக்கு வழங்கப்பட்டு வரும் தொலைபேசி வசதியின் கால அளவை 3 நாட்களுக்கு ஒரு முறை, மாதத்திற்கு 10 முறை, ஒரு அழைப்பிற்கு 12 நிமிடங்கள் உயர்த்தி வழங்குவதோடு காணொளி தொலைபேசி வசதியினை புதியதாக ஏற்படுத்த அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சிறைவாசிகளின் மன அழுத்தத்தை குறைக்கவும் அவர்கள் தவறுகளை உணர்ந்து மேலும் குற்றங்களில் ஈடுபடுவதை தடுத்திடும பொருட்டும், சிறைவாசிகள் தமது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், வழக்குரைஞர்கள் ஆகியோரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள தற்போது வழங்கப்பட்டு வரும் தொலைபேசி வசதிக்கான (ஆடியோ) கால அளவை 3 நாட்களுக்கு ஒரு முறை மாதத்திற்கு 10 முறை ஒரு அழைப்பிற்கு 12 நிமிடங்கள் என உயர்த்தி வழங்குவதோடு, காணொளி (வீடியோ) தொலைபேசி வசதியும் ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback