Breaking News

ஆவின் பால் பாக்கெட்டுகள் கால்வாயில் கொட்டப்பட்டதாக பரவும் தகவல் - தமிழக அரசு விளக்கம்

அட்மின் மீடியா
0

ஆவின் பால் பாக்கெட்டுகள் கால்வாயில் கொட்டப்பட்டதாக பரவும் தகவல் - தமிழக அரசு விளக்கம்



தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட குளக்கரைக்கு பின்புறமாக கால்வாயில் ஆவின் பால் பாக்கெட்டுகள் கொட்டப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியிடப்பட்டன. இது தொடர்பாக கீழ்கண்டவாறு விளக்கம் அளிக்கப்படுகிறது.

ஆவின் நிறுவனம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 15 லட்சம் லிட்டர் பால் சில்லறை விற்பனையாளர்கள், பால் டெப்போக்கள் மற்றும் மொத்த விற்பனையார்கள் மூலமாக பொது மக்களுக்கு விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் 04.12.2023 தேதியன்று மிக்ஜாம் புயல் காரணமாக அதிக அளவில் மழை பொழிந்ததால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி மின்சாரம் தடைப்பட்டது. எனவே தாம்பரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பல பால் விற்பனை நிலையங்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகள் மூடப்பட்டன. 

எனவே சில இடங்களில் 04.12.2023 தேதியன்று பொது மக்களுக்கு பால் விற்பனை செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. இதனால் 04.12.2023 அன்று விற்பனை செய்ய இயலாத ஆவின் பால் பாக்கெட்டுகள் மற்றும் தனியார் பால் பாக்கெட்டுகளை சில சூப்பர் மார்கெட்டுகள் மற்றும் வியாபாரிகள் அங்கே கொட்டிவிட்டு சென்றதாக தெரியவருகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் மேலும் ஆவின் பால் பாக்கெட்டுகள் வீணாக கால்வாயில் கொட்டப்பட்டது என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback