ஊர்காவல் படைக்கு விண்ணப்பிக்கலாம் முழு விவரம் தெரிந்து கொள்ள
வேலூர் மாவட்ட ஊர்க் காவல் படை யில் சேர தகுதியுடைய இளை ஞர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளிக்கலாம் என்று மாவட்டக் காவல் கண் காணிப்பாளர் என்.மணிவண் ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வேலூர் மாவட்டத்தில்காலி யாக உள்ள 20 ஊர்க் காவல் இடங்களை நிரப்ப வேலூர் தலைமை தபால்நிலையம் அருகிலுள்ள ஊர்க் காவல் படை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (டிச.15) விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.
ஊர்க் காவல் படையில் சேர 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற் றிருப்பதுடன், சேவை மனப்பான்மை உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு மாத ஊதியம் கிடையாது. பணி நாள்களுக்கு உண்டான தொகுப்பூதியம் மட்டுமே வழங்கப்படும். 45 நாள்கள் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் தங்கி பயிற்சி பெற வேண்டும்.
விண்ணப்பங்களை பெற்ற நாளிலிருந்து 7 நாள்களுக்குள் பூர்த்தி செய்து உரிய ஆவணங் களுடன் ஊர்க் காவல் படை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
தகுதியான நபர்களுக்கு உரிய தேர்வு நடத்தி தேர்ச்சி பெறுப வர்களுக்கு பணியமர்வு அளிக் கப்படும். தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags: வைரல் வீடியோ