Breaking News

மழை வெள்ளத்தால் பழுதான வாகனங்களை பழுது பார்க்க சிறப்பு முகாம் தமிழக அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0

மழை வெள்ளத்தால் பழுதான வாகனங்களை பழுது பார்ப்பது தொடர்பாக கட்டணமில்லா தொலைபேசி எண்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மற்றம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக்ஜாம் புயலினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் வெள்ளம் தேங்கியிருந்த பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கரவாகனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவ்வாகனங்களுக்கு பழுது நீக்கம் செய்யவும், உரிய இழப்பீடு வழங்கவும் வாகனத்தயாரிப்பு, நிறுவனங்கள், டீலர்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுடன் வட்டாரப்போக்குவரத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



மேலும், 08.12.2023 அன்று மாண்புமிகு நிதிஅமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலும் வாகனத்தயாரிப்பு நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் வட்டாரப்போக்குவரத்து அலுவலர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட கூட்டத்திலும் உடனடியாக அறிவுரைகள் வழங்கப்பட்டன. மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து

அதன்படி கீழ்கண்ட நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

டீலர்கள்:

அனைத்துவாகனத் தயாரிப்பு நிறுவனங்களின் சர்வீஸ் சென்டர்கள் மற்றும் டீலர்களின் சர்வீஸ் சென்டர்கள் அனைத்தும் உடனடியாக செயல்பாட்டிற்க்கு கொண்டுவரப்பட்டு பழுதுநீக்கப்பணிகள் துறிதப்படுத்தபட்டுள்ளது.

வெள்ளத்தில் மூழ்கியிருந்த வாகனங்களை எக்காரணம் கொண்டும் இயக்க வேண்டாம் எனவும் அவற்றின் Engine- ஆன் செய்யாமல்

இந்நிலையில் மழை வெள்ளத்தால் பழுதான வாகனங்களை பழுது பார்ப்பது தொடர்பாக கட்டணமில்லா தொலைபேசி எண்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 



ராயல் என்பீல்டு- 1800 2100 007, 

யமஹா- 1800 4201 600, 

டிவிஎஸ்- 1800 2587 555, 

ஹோண்டா- 1800 1033 434, 

சுசூகி- 1800 1217 996, 

மாருதி சுசூகி- 1800 1800 180, 

லான்சன் டொயோடா- 1800 1020 909, 1800 2090 909, 

கியா மோட்டார்ஸ்- 1800 1085 000, 

ஹூண்டாய்- 1800 1024 645, 

டாடா மோட்டார்ஸ்- 1800 209 8282, 

டொயோடா- 1800 102 50001 

என்ற எண்களை தொடர்பு கொண்டு சேவைகளை பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு:- கிளிக் செய்யவும்

https://twitter.com/TNDIPRNEWS/status/1733821425394520119

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback