Breaking News

தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு புதிய அட்டவணை அறிவிப்பு

அட்மின் மீடியா
0

தொடர் மழையின் காரணமாக, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கால அட்டவணையில் 11.12.2023 முதல் குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் அதே பாடத்திற்கான தேர்வுகள் நடைபெறும் எனவும், 

 

07.12.23 மற்றும் 08.12.23 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் மட்டும் 14.12.23 மற்றும் 20.12.23 ஆகிய தேதிகளில் முறையே நடைபெறும் எனவும் அறிவிக்கப்படுகிறது. 

இதன் மூலம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் பள்ளி அளவில் வினாத்தாட்கள் தயாரிக்கும் சிரமங்கள் தவிர்க்கப்படும்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback