அட்டைபெட்டியில் இறந்த குழந்தையின் உடல் பிணவறை ஊழியர் சஸ்பெண்ட் முழு விவரம்
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தையின் உடலை அட்டைப் பெட்டியில் வைத்து வழங்கிய விவகாரத்தில் குழந்தையின் பிணவறை ஊழியர் பன்னீர்செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
வடசென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த மசூத் என்பவரின் மனைவி சௌமியாவிற்கு கடந்த 6 ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது .ஆனால் அப்போது வீட்டை சுற்றி வெள்ளம் சூழ்ந்துள்ளதால் உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் அழைத்து வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்க அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அங்கிருந்து படகு மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இறந்து பிறந்த குழந்தையின் உடல் மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது
அட்டைப்பெட்டியில் குழந்தையின் உடலை கொண்டு வரும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். உடனடியாக அமைச்சர் மா.சுப்பிரமணியனின் ஆணைப்படி சம்மந்தப்பட்ட அரசு பணியாளரை பணியிடை நீக்கம் செய்தார். மேலும் இந்த நிகழ்வை மருத்துவ கல்வி இயக்கம் மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் இயக்குனர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து முதல்வருக்கு சம்மந்தப்பட்ட நபர்களின் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினார்.
மேலும் இந்த நிகழ்வை விசாரணை செய்வதற்காக மூன்று பேராசிரியர்கள் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனை பணியாளர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து மூன்று பேர் கொண்ட மருத்துவர்கள் குழுவினர் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பச்சிளம் குழந்தையின் தந்தை தாமே இயற்கை முறையில் மனைவிக்கு பிரசவம் செய்ய முயற்சி மேற்கொண்டதாக தகவல் வெளியிட்டுள்ளார். இயற்கை முறை சிகிச்சை காரணமாகவே பச்சிளம் குழந்தை இறந்து பிறந்துள்ளது. இவ்வாறு கூறினார்.
Tags: தமிழக செய்திகள்