Breaking News

அதிகரிக்கும் கொரோனா ஊரடங்கு இல்லை துணைப் பிரதமர்|தடுப்பூசி போடவும் முகக்கவசம் அணிந்துகொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தல்,

அட்மின் மீடியா
0

கொரோனா நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை சமீபத்தில் அதிகரித்து வரும் நிலையில், சிங்கப்பூர் அரசாங்கம் சர்க்யூட் பிரேக்கரை (ஊரடங்கு கட்டுப்பாடு) மீண்டும் நிறுவ விரும்புவதாகக் கூறி, தவறான தகவல்கள் பரவி வருவதாக துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் வெளியிட்ட அறிக்கையில் பொதுமக்களை எச்சரித்துள்ளார்



சிங்கப்பூரில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதாகவும் ,மருத்துவ மனைகளில் சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வூகானில் பரவிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுதும் பரவி பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தின.

தற்போது கொரோனா தாக்கம் பெருமளவு குறைந்துள்ள நிலையில், சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்று அறிகுறியுடன் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா  கிருமித்தொற்றுக்கு முந்திய ஆண்டுகளில் தினசரி 3,000 முதல் 3,500 சம்பவங்கள் பதிவாகி வந்ததுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு எண்ணிக்கை குறைந்திருந்தாலும் கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா க்கு எதிராக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் குறைவான கிருமித்தொற்று விகிதங்கள் பதிவாகி வருவதாக கூறப்படுகின்றது

மேலும் கூட்டமான இடங்களில் முகக்கவசம் அணியுமாறு மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

இதையடுத்து அந்நாட்டு சுகாதார அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில், பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்கும்படி அறிவுறுத்தி உள்ளது.

துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் டிசம்பர் 11ம் தேதி அவர் வெளியிட்ட தனது Facebook பதிவில்

டிசம்பர் 11ஆம் தேதி, ஃபேஸ்புக்கில் அவர் அவ்வாறு பதிவிட்டுள்ளார்.வர்த்கப் பொருள்களைத் தாம் அங்கீகரிப்பதாகக் கூறும் சில பதிவுகளும் தகவல்களும் பொய்யானவை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என வலியுறுத்திய திரு வோங், இணையத்தில் பரவும் தகவல்களைப் பகுத்துணரும்படி கேட்டுக்கொண்டார்.

இந்த ஆண்டில் அரசியல் தலைவர்களின் பெயரைப் பயன்படுத்திப் பொய்யான தகவல் பரப்பும் சம்பவங்கள் இடம்பெற்றன.மனிதவள மூத்த துணை அமைச்சர் கோ போ கூன், தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், சுகாதார அமைச்சர் ஓங் யி காங், உள்துறை, சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணை அமைச்சர் சுன் ஷுவெலிங், பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சக்தியாண்டி சுபாட் ஆகியோரின் பெயர்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டன.

அரசாங்கம், 2020ஆம் ஆண்டு சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தீவிர கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது.தற்போது கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் அத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்ற வதந்தி இணையத்தில் பரவுகிறது.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback