தேமுதிகவின் பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு
தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதாவை நியமித்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை திருவேற்காட்டில் நடைபெற்ற தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது
இந்த நிகழ்வில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்கேற்று இருந்தார் தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது மேலும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் பேசுகையில்
இனிமேல் நமது தலைவரைப் போல ஒருவர் பிறந்து வந்தால்கூட, தேமுதிக தலைவர் விஜயகாந்தைப் போன்ற மனிதரை, புனிதரை யாரும் பார்க்க முடியாது.
அவரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தக் கட்சி சாதாரண கட்சி இல்லை. அவருடைய லட்சியம், கொள்கைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி தேமுதிக. தலைவர் விஜயகாந்த்,
எதற்காக இந்தக் கட்சியை ஆரம்பித்தாரோ, அந்த லட்சியத்தை கொள்கையை எப்போது நாம் அடைவோம். தமிழகத்தில் தேமுதிக ஆட்சி அமைக்கும் நாள்தான், நமது தலைவரின் லட்சியமும், கொள்கையும் வென்றதற்கான அர்த்தம்.
நான் இதை வெறும் வார்த்தைகளுக்காக சொல்லமாட்டேன் என்பது உங்களுக்குத் தெரியும்.நான் உங்களுக்காக 24 மணி நேரமும் உழைக்க தயாராக இருக்கிறேன்.
இன்று எனக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அது ஒன்றும் மேடையில் வைக்கப்பட்டுள்ளது போன்ற மலர் கிரீடம் கிடையாது. அதுவொரு முள் கிரீடம். உண்மையாகவே நான் பதற்றமாகவும், மன அழுத்தத்துடன் இருக்கிறேன். மிகப்பெரிய பொறுப்பை அனைவரும் சேர்ந்து எனக்கு வழங்கி இருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். நான் எதற்கு அஞ்சமாட்டேன். சவால் என்று வந்தால், சவால்தான்.
2011-ல், எதிர்க்கட்சித் தலைவராக தலைவருடன் 29 எம்எல்ஏக்கள் சட்டமன்றத்துக்கு சென்றீர்களோ, அந்த வரலாற்றை மீண்டும் திரும்ப வரவைப்பேன். அதற்காக உங்களை நான் கேட்டுக் கொள்வது எல்லாம், உண்மையாக, நேர்மையாக தேமுதிகவுக்காக உழைக்கக் கூடியவர்களாக நீங்கள் இருக்க வேண்டும்" என்று பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
Tags: அரசியல் செய்திகள்