செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து! முழு விவரம்
செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து! முழு விவரம்
தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு ரயில், செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த திடீர் விபத்தில் சரக்கு ரயிலில் 10-க்கும் மேற்பட்ட பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கியது .உடனடியாக ரயில்வே ஊழியர்கள் அங்கு மீட்பு பணியில் ஈடு பட்டு அதை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த ரயில் பெட்டிகள் தடம் புரண்ட விபத்தில் தண்டவாளங்கள் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது,
இதனால் சென்னை கடற்கரை, செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் எனவும் சென்னை கடற்கரையில் இருந்து செல்லும் எந்த மின்சார ரயில்களும் இன்று| செங்கல்பட்டு வரை இயக்கப்படாது என்றும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்படுகிறது. எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
அதேபோல் மற்றும் தென்மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் விரைவு ரயில்களும் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
மீட்பு பணிகள் வீடியோக்கள் பார்க்க:-
https://twitter.com/dt_next/status/1734073848239440069
Tags: தமிழக செய்திகள்