வெள்ள நிவாரணம் 6000 வீடு வீடாக டோக்கன்கள் விநியோகிப்படும்
இன்று முதல் வீடு வீடாக டோக்கன்கள் விநியோகிப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகமிக கனமழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை வெள்ளம் சூழ்ந்து கொண்டது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
யாருக்கெல்லாம் 6000 ரூபாய் கிடைக்கும் அரசாணை வெளியிட்ட தமிழக அரசு முழு விவரம்
இதற்கான டோக்கன் டிசம்பர் 16ம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் நேற்று செய்தியாளர்களிடம்
மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் மக்களுக்கான நிவாரண உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம்.இதுமட்டுமின்றி, மிக்ஜாம் புயல் நிவாரண தொகையாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருக்கிறார்.
அதன்படி, ரேஷன் கடைகள் மூலமாக இந்த தொகை வழங்கப்படும் என அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக அனைத்து குடும்பத்தினருக்கும் வீடுகளுக்கே சென்று டோக்கன்கள் வரும் 16ம் தேதி முதல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரேஷன் அட்டைகளை தவறவிட்டவர்கள் அந்தந்த ரேஷன் கடைகளிலேயே விண்ணப்ப படிவங்கள் பெற்று பதிவு செய்து கொடுத்தால் அவர்களுக்கும் நிவாரண தொகை வழங்கப்படும். நிவாரண தொகை அளிக்க தொடங்கிய உடன் அதிகபட்சமாக 5 நாட்களுக்குள் அனைவருக்கும் அந்த தொகையை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Tags: தமிழக செய்திகள்