Breaking News

சென்னையில் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் ரூ.6,000 வழங்கப்படும் அமைச்சர் தங்கம் தென்னரசு

அட்மின் மீடியா
0

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அனைவருக்கும் தலா 6,000 ரூபாய் ரேஷன் கடைகள் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

 


கொரோனாவைப் போல ‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறம்பட கையாண்டார். தமிழ்நாடு அரசு ‘மிக்ஜாம்’ புயலை திறம்பட கையாண்டு வென்றுள்ளது. சென்னையில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் புயல் நிவாரண நிதியாக ரூ.6000 வழங்கப்படும்.” என்று அறிவித்துள்ளார் 
 
மேலும் ரொக்கமாக பணம் வழங்கப்படும் போது தான் , அது முழுதாக மக்களிடம் சென்றடையும் வரும் 16ஆம் தேதி முதல் இதற்கான டோக்கன் ரேஷன் கடைகளில் ரேஷன் கார்டுபடி வழங்கப்படும். 
 
சென்னையில் அனைத்து ரேஷன் கார்டு காரர்களுக்கும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டும் இந்த நிவாரண தொகை வழங்கப்படும். ரேஷன் கார்டு இல்லாதவர்கள், ரேஷன் கார்டு விண்ணப்பித்து உள்ளவர்கள் முறையீடு செய்யலாம் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட தாலுகாக்களுக்கு மட்டும்  ரூ.6,000. கொடுக்கப்படும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback