Breaking News

நாகூர் தர்கா கந்தூரி சந்தனக்கூடு 45 கிலோ சந்தனக்கட்டைகளை வழங்க தமிழக அரசு அரசாணை

அட்மின் மீடியா
0
நாகூர் தர்கா கந்தூரி சந்தனக்கூடு 45 கிலோ சந்தனக்கட்டைகளை வழங்க தமிழக அரசு அரசாணை
 
 
நாகூர் தர்கா கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு 45 கிலோ சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணை - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
 
நாகூர் தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தூரி திருவிழாவிற்கு, தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் கோரிக்கையினை ஏற்று தமிழ்நாடு அரசு வனத்துறையில் இருப்பில் உள்ள சந்தனக்கட்டைகளை நாகூர் தர்காவிற்கு கட்டணமின்றி வழங்கி வருகின்றது.
 
அதன்படி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (13.12.2023) தலைமைச் செயலகத்தில், நாகூர் தர்கா பெரிய ஆண்டவர் கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு தமிழ்நாடு அரசு 45 கிலோ சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையினை நாகூர் தர்கா பரம்பரை அறங்காவலர் திரு. அல்ஹாஜ் செய்யது காமில் சாஹிப், தலைமை நிருவாக அறங்காவலர் திரு. செய்யது முகமது காஜி ஹூசைன் சாஹிப் மற்றும் நாகூர் தர்கா ஆலோசனைக் குழு தலைவர் திரு. செய்யது முஹம்மது கலீபா சாஹிப் ஆகியோரிடம் வழங்கினார்.
 
இந்நிகழ்வில், மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு. செஞ்சி கே.எஸ்.மஸ்தான், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் டாக்டர். மா.மதிவேந்தன், தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி. சுப்ரியா சாஹூ, இ.ஆ.ப., தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் திரு.ந. கௌதமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-

நாகூர் தர்கா பெரிய ஆண்டவர் கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு தமிழ்நாடு அரசு 45 கிலோ சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையினை நாகூர் தர்கா பரம்பரை அறங்காவலர் திரு. அல்ஹாஜ் செய்யது காமில் சாஹிப், தலைமை நிருவாக அறங்காவலர் திரு. செய்யது முகமது காஜி ஹூசைன் சாஹிப் மற்றும் நாகூர் தர்கா ஆலோசனைக் குழு தலைவர் திரு. செய்யது முஹம்மது கலீபா சாஹிப் ஆகியோரிடம் மாண்புமிகு முதலமைச்சர் திரு.

அவர்கள் வழங்கினார்

முதல்வர் அறிவிப்பினை பார்க்க:-

https://twitter.com/CMOTamilnadu/status/1734818391733813642 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback